BSP next leader Pa Ranjith | ஆம்ஸ்ட்ராங் இடத்தில்... அடுத்த தலைவர் பா.ரஞ்சித்! பரபரக்கும் வட சென்னை
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைசெய்ய பட்டதையடுத்து அடுத்த பகுஜன் சமாஜ் மாநில தலைவராக நீங்க தான் வழிநடத்தணும் என்று ரஞ்சித்தை நோக்கி வந்த குரலால் தமிழ்நாடு bsp-யின் தலைவராகிறார பா. ரஞ்சித் என்ற கேள்வி தீயாய் உலா வருகிறது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி, சென்னை பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் தமிழக அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்! என அவர் தமிழக அரசிடம் கேட்ட கேள்விகள் நள்ளிரவிலேயே சர்ச்சையாக வெடித்து.
இப்படிபட்ட சூழலில் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் களத்தில் உருவாகியிருக்கிறது... ஆம்ஸ்ட்ராங் அளவுக்கு, அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியிருப்பதோடு, ஆக்கப்பூர்வமான அரசியலையும் முன்னெடுத்து வருபவர் ரஞ்சித்..,அதனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக நீங்களே எங்களை வழிநடத்தவேண்டும் என இயக்குநர் ரஞ்சித்திடம் ஒரு சில இளைஞர்கள் கோரிக்கை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இயக்குநர் ரஞ்சித்தின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான தமிழ்ப்பிரபா தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்...அதில், ``இந்த மூன்று நாட்களும் மருத்துவமனையிலும், இறுதி ஊர்வலத்திலும் எந்த ஒரு வன்முறையும் நிகழாமல் நீ அடக்கம் செய்யப்பட்டாய். ஒரு தலைவன் தன் மக்களை எப்படி வழிநடத்தியிருக்கிறான் என இந்த மாநிலம் அறிந்து கொள்வதற்கு நீ உன் உயிரையே விலையாகக் கொடுத்திருக்கிறாய் அண்ணா. “ஒரு கூட்டத்தோட தலைவன தூக்கிட்டா இனி எல்லோரும் சிதறிப்போயிடுவானுங்க. இப்போ செய்” என மெட்ராஸ் படத்தில் வில்லன் பேசும் வசனம் வரும். ஆனால் கூட்டம் சிதறவில்லை முன்பெப்போதும் விட தீவிரமாக ஒன்றிணையும் காலமும், தேவையும் உருவாகியிருப்பதாகவே பார்க்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.