OPS Sengottaiyan | ஒரே காரில் OPS உடன் பயணம்! செங்கோட்டையன் ப்ளான் என்ன? ENTRY கொடுத்த TTV

Continues below advertisement

தேவர் நினைவிடத்தில் செங்கோட்டையன்,ஓ.பன்னீர்செல்வம்,டிடிவி தினகரன் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செய்த நிலையில், செங்கோட்டையன் எங்களோடு இணைந்ததில் மகிழ்ச்சி என்று டிடிவி கூறியிருப்பது அரசியல் களத்தில் பேசிபொருளாகியுள்ளது.


செங்கோட்டையன்,ஓ,பன்னீர்செல்வம்,டிடிவி் தினரகன் உள்ளோட்டோர் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து இருந்தார். அதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதோடு செங்கோட்டையன் ஆதரவாளர்களையும் அடுத்தடுத்து நீக்கி அதிரடி காட்டினார். இச்சூழலில் தான் டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன் பாஜக தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து பேசினார். அமித்ஷா மற்றும் நிர்மலாசீதாராமனைச் சந்தித்த பிறகு சைலண்ட் மோடுக்கு சென்றார். இச்சூழலில் தான் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செங்கோட்டையன் காரில் ஒன்றாக வந்தார். இபிஎஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் செங்கோட்டையன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் ஒரே காரில் பயணித்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது. இதனைடையே, அடுத்ததாக மூவரும் இணைந்து  தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்த டிடிவிிி தினகரன் செங்கோட்டையன் எங்களோடு இணைந்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், “அண்ணன் செங்கோட்டையன் மற்றும் அண்ணன் ஓபிஎஸ் ஆகியோர் இன்றைக்கு பசும்பொன் தேவரய்யா நினைவிடத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அம்மாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்பதால் செங்கோட்டையன் கொங்கு நாட்டில் இருந்து இங்கே வந்திருக்கிறார்”என்று கூறியிருக்கிறார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் யிடம் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதிற்கு, “கட்சிக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்று சூசகமாக பதிலளித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola