போடியில் களமிறங்கும் அதிமுகவினர் வளர்த்தவர்களே எதிராக சதி ராமநாதபுரமே செல்லும் OPS? | OPS Ramanathapuram
போடி சட்டமன்றத் தொகுதியில் என்னதான் ஓபிஎஸ் தொடர் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், இரட்டை இலையின் செல்வாக்கு அதிகம் என்பதால், ஓபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தவர்களும் கூட எடப்பாடி பழனிசாமியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சட்டசபைத் தேர்தலின் போதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்கள் அதிமுகவுடைய கோட்டையாக இருந்தது. தென் மாவட்டத்தை பொருத்தவரைக்கும் எந்த மாவட்டத்தில் எந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் இரட்டை இலை சின்னத்திற்கு தனி மெஜாரிட்டி இருந்து வந்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை காரணமாக கட்சியில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டது. இந்தநிலையில் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி தன்வசம் தக்க வைத்துள்ளார். இந்த நிலையில் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியை மீட்கும் பணியில் மட்டுமே ஓபிஎஸ் கவனம் செலுத்தி வந்தார். தற்போது வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் 2026 இல் ஓபிஎஸ் தான் தக்கவைத்து வரும் போடி தொகுதியை தன் மகனுக்கு கொடுத்துவிட்டு தான் ராமநாதபுரம் பகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
குறிப்பாக போடியில் தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஓபிஎஸ் கட்சியில் அவர் வளர்த்து விட்டவர்களே அவருக்கு எதிராக திரும்பி உள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. அதாவது ஏற்கனவே ஓபிஎஸ் ஆல் வளர்த்து விட்டவர்களே தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடம் போடி தொகுதியில் நிற்பதற்கு பேசி வருவதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க ஓபிஎஸ் பாஜகவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வந்தாலும் தற்போது எண்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை இருக்கும் சூழ்நிலையில் போடித் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்களே அவருக்கு எதிராக பலரும் திரும்பி உள்ளனர். தேனி மாவட்டம் அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைத்தவர்களே இன்று அவரை எதிர்க்க தயாராகி வருவதாக கூறப்படுவது ஓபிஎஸ் அரசியல் பயணத்திற்கு கேள்விக்குறியாக்கி உள்ளது.
இது ஒரு புறம் இருக்க வரும் சட்டமன்ற தேர்தலை ஓபிஎஸ் அலட்டிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலின்போது தேனியில் போட்டியிடாமல் ராமநாதபுரம் பகுதியில் போட்டியிட்டது போல் இம்முறையும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போல அவரது மகன் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் குமாரை தற்போது தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் போடி தொகுதியில் போட்டியிட வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல தென் மாவட்டங்களில் சுயேட்ச்சையாக போட்டியிட்டு அதிமுக மற்றும் எந்த அணி சார்பும் இல்லாமல் இருப்பது ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் அரசியல் அனுபவத்தில் இந்த தேர்தலை வென்று காட்டுவார்களா இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.