OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?

செல்போன் காணாமல் போய்விட்டதாக சொல்லி சென்னை விமான நிலையத்திலேயே ஓபிஎஸ் மணிக்கணக்காக காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அவ்வப்போது சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்று வருகிறார். அந்த வகையில் நேற்று மாலை மதுரையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து காரில் கிளம்பும் போதுதான் செல்போன் காணாமல் போனது தெரிய வந்தது.  உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரியிடம் சொல்லி விமான நிலையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. 

பின்னர் VIP-க்கள் அறையில் தேடிய போது செல்போன் இல்லாததால் ஓபிஎஸ் பயணித்த விமான நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஊழியர்கள் மூலம் தேடினர். விமானத்தில் தேடிய போது அவரது இருக்கையில் செல்போன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

விமானத்தில் தவறவிட்ட பொருட்களை திரும்ப பெற சில நடைமுறைகள் உள்ளதால், போர்டிங் பாஸ் உள்ளிட்டவற்றை வாங்கி பரிசோதனை செய்தனர். அதுவரை ஓபிஎஸ் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் உடனடியாக செல்போனை திருப்பி தர முடியாது என்பதால் வீட்டிற்கு செல்லுங்கள் அங்கு வந்து தருகிறோம் என பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றார். ஒரு மணி நேரம் கழித்து அவரது செல்போன் வீட்டிற்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola