OPS meets MK Stalin | OPS ஸ்டாலின் திடீர் சந்திப்பு!ரகசிய பேச்சுவார்த்தை?திமுக கூட்டணியில் OPS?
அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை என ஈபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் முக ஸ்டாலினும் ஓ பன்னீர்செல்வமும் இன்று காலை திடீரென சந்தித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் முக ஸ்டாலின் கடந்த ஒரு வாரமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். உடல்நலக்குறைவு காரணமாக இத்தனை நாட்களாக தலைமை செயலகத்திற்கு முதல்வர் செல்லவில்லை. இந்நிலையில் அவர் இன்று தான் மீண்டும் தலைமை செயலகம் செல்கிறார்.
இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல் தனது வீட்டிற்கு அருகில் உள்ள அடையார் பார்க்கில் முதல்வர் வாக்கிங் சென்றுள்ளார். அதே பார்க்கிற்கு வாக்கிங் வந்துள்ளார் ஓ பி எஸ். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்
கொண்ட நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் நலம் விசாரித்தார்.
இதனையடுத்து இருவரும் சில நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன. ஓபிஎஸ்ஸும் எப்படியாவது அதிமுகவுடன் இணைந்துவிட வேண்டும் என முட்டிமோதி வந்தார். ஆனால் ஒரே அடியாக கை கழுவிவிட்டார் ஈபிஎஸ். அதே சமயம் ஓபிஎஸ்சின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக இருந்த பாஜகவும் எடப்பாடிக்கு ஆதரவாக பன்னீர்செல்வத்திற்கு கை விரித்துவிட்டனர். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ்ஸின் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.