
NTK BJP Alliance : சீமானுடன் முடிந்த டீல்.. பாஜகவில் மெகா கூட்டணி! அண்ணாமலை ஸ்கெட்ச் 2026
சீமான் 2026-ல் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலையும் சீமானும் ஒன்றாக கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் மோடியை சீமான் புகழ்ந்து தள்ளியிருப்பதன் பின்னணியில் கூட்டணி கணக்கு இருப்பதாக சொல்கின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சரம் மேற்கொண்டவர். அதேபோல், 2014 நாடாளுமன்ற தேர்தலின் போதும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தவர். இதனைத் தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது.
இதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. இப்படி தேர்தல் அரசியலில் கவனிக்கத்தக்க கட்சியாக மாறிய நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்ட கட்சியியாகவும் மாறியது. இப்போது நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 8.19% ஆக இருக்கிறது. இதனால் சீமான் யார் பக்கம் செல்கிறாரோ அவர்களது ஆட்சி தமிழ் நாட்டில் உருவாகும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் அடிப்படையில் திமுக - 37.15%, அதிமுக - 33.28% வாக்கு சதவீத்துடன் இருந்தது. 4 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. பல தொகுதிகளில் திமுகவிற்கும் ஆதிமுகவிற்கும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகள் தான் வித்தியாசம் இருந்தது. சீமான் இந்த வாக்குகளை பிரிக்கவில்லை என்றால் இவையெல்லாம் அதிமுகவிற்கான வாய்ப்பாக அமைந்திருக்கும் என்று சொல்லப்பட்டது.
இந்த சூழலில் தான் அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்றால் போல் சீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் அனைவரும் சீமானுக்கு எதிராக பேசிய போது இபிஎஸ் மட்டும் அது அவரது பர்ஸ்னல் விசயம் அதை பற்றியெல்லாம் கேட்கதீர்கள் என்று சாப்ட் டோனில் பதில் சொன்னார். இதன் மூலம் அதிமுக கூட்டணிக்குள் நாம் தமிழர் கட்சியை இணைக்க வேண்டும் என்று இபிஎஸ் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தான் உள்ளே புகுந்து பாஜகவின் பக்கம் நாம் தமிழர் கட்சியை இழுத்திருக்கிறார் அண்ணாமலை. அதிமுக உடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் அவர். திமுக - அதிமுகவிற்கு எதிராக மூன்றாவது கூட்டணியை அமைக்கவேண்டும் என்பது தான் அண்ணாமலையின் விருப்பம் என்றும் சொல்ல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இணைத்து மூன்றாவது கூட்டணியை உருவாக்கினார் அண்ணாமலை. 12 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்கு சதவீத்ததை இந்த கூட்டணி பெற்றது.
இச்சூழலில் தான் இந்த கூட்டணிக்குள் நாம் தமிழர் கட்சியும் உள்ளே வந்தால் அது இன்னும் பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் எப்படியாவது சீமானை தங்கள் கூட்டணிக்குள் இழக்க வேண்டும் என்ற முயற்சியில் அண்ணாமலை தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் அச்சாரம் தான் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சீமானும் அண்ணாமலையும் ஒரே மேடையில் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்வு பார்க்கப்படுகிறது. பல இடங்களில் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் இன்றைய நிகழ்வில் மோடி மற்றும் அண்ணாமலையை புகழ்ந்து தள்ளினார்.
இதனால் பாஜகவுடன் சீமான் கூட்டணி வைக்கப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில காலம் இருப்பதால் சீமான் அதிமுகவுடன் செல்கிறாரா இல்லை பாஜக உடன் செல்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.