Nitish Kumar : மோடியுடன் திடீர் மீட்டிங் CM நிதீஷ் ராஜினாமா?பரபரக்கும் டெல்லி

Continues below advertisement

பீகார் முதலமைச்சர் பதவியை பாஜகவுக்கு கொடுத்துவிட்டு, மத்திய அமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு மீண்டும் RJD மற்றும் காங்கிரஸ் உதவியுடன் பீகார் முதலமைச்சரானார் நிதிஷ் குமார். துணை முதலமைச்சராக RJD தலைவரான தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார். இந்த ஆட்சி  ஜனவரி 28, 2024 வரை நீடித்தது. அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரத்திலேயே, மீண்டும் பாஜகவின் ஆதரவுடன் நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்றார்.

 

இது தேசிய அரசியல்  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை பதவியை ராஜினாமா செய்து, இரண்டு முறை மீண்டும் முதலமைச்சராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றுள்ளார். இப்படி திடீர் திடிரென கூட்டணியை முறித்துக் கொள்வது என்பது நிதிஷ்குமாருக்கு புதியதல்ல. அப்படிபட்ட முடிவுகளால் கடந்த 24 ஆண்டுகளில் 9 முறை நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அடிக்கடி கூட்டணியை மாற்றுவதால் இவரை பல்டிமார் என விமர்சிப்பதும் உண்டு. 

 

இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், மோடியை பீகார் முதலமைச்சர்  நிதிஷ்குமார் சந்தித்து பேசி உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த நிதிஷ்குமார் இன்று மாலையில் மத்திய அமைச்சர்அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்,பீகார் முதலமைச்சர்  பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பதவியேற்க இருப்பதாக பீகார் அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 1999-ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி்ஷ்குமார் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆதரவில் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் தற்போது முதலமைச்சர் பதவியை பாஜகவுக்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் முதலமைச்சர் பதவியை பாஜகவுக்கு கொடுத்து விட்டு மத்திய அமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram