Nehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!

Continues below advertisement

standup comedy என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி என்ற நபருக்கு எதிராக கண்டங்கள் குவிந்து வருகின்றன. இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை மத்திய அரசு கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அண்மைகாலங்களில் நேருவிற்கு எதிரான பொய் பிரச்சாரங்களை பாஜக பல்வேறு வழிகளில் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருந்தது. 


இச்சூழலில் தான் standup comedy-யன் என்ற பெயரில் வலம் வரும் பரத் பாலாஜி என்ற நபர் ஜவகர்லால் நேரு பற்றி அறுவறுக்கத்தக்க வகையில் மிகவும் மோசமாக பேசி இருக்கிறார். இந்த நிலையில், ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் நேருவை இழிவாக பேசி வரும் பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என  நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் போர்க்கொடு தூக்கியுள்ளனர். 
இந்த நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை standup comedy யன் பரத் பாலாஜியை கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது. 

கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது. வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.”என்று கூறியுள்ளார்.

கடும் எதிர்ப்பு கிளம்புயதை அடுத்து பரத் பாலாஜி மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், “என்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்று மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதால் அந்த வீடியோவை நான் நீக்கிவிட்டேன். 
இது கவனக்குறைவால் நடந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன், இது மீண்டும் நடக்காது.”என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram