நாற்காலிச்சண்டை.. ரங்கசாமிக்கு நாராயணசாமியின் அடுக்கடுக்கான கேள்விகள்
புதிய அரசு அமைந்து 45 நாள்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. பதவிக்காகப் பேரம் பேசி காலத்தைக் கடத்துகிறார்கள். மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிக அளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை. மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல் நாற்காலிக்காகச் சண்டை போடுகிறார்கள். புதுச்சேரியில் கொரோனா வின் தாக்கத்தை கடந்த ஆட்சியில் கட்டுக்குள் வைத்து போர்க்கால அடிப்படையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டு நடவடிக்கை மேற்கொண்டதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார், ஆனால் தற்பொழுது உள்ள என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆனது பதவிக்காக பேரம் பேசிக்கொண்டு நாற்காலி சண்டை போட்டு வருகின்றனர். இவர்களின் நாற்காலி சண்டை கிடையில் பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக்குறியாக இருப்பதாகவும், கொரோனா வின் இரண்டாவது அலை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, ஆனால் தற்போது வரை கட்டுக்குள் வைத்திருக்க ஆட்சியாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார், மேலும் பாகூர் முதல் புதுச்சேரி வரையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேதாந்தா நிறுவனம் இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது ஆனால் இந்த இடத்தில் ஹைட்ரோகார்பன் எடுத்தாள் புதுச்சேரி முற்றிலுமாக அழிந்துவிடும் எனவும், விவசாயிகளின் நெற்களஞ்சியமாக இருக்கக்கூடிய காரைக்கால் முற்றிலுமாக பாதிக்கப்படும் எனவும் கூறினார். மேலும் தற்போதுள்ள அரசுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உடன்பாடில்லை என தெரிகிறது எனவும் அவ்வாறு ஹைட்ரோகார்பன் எடுக்கும் பட்சத்தில் வீதியில் இறங்கி போராடவும் நான் தயங்க மாட்டேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது தடுப்பூசி திருவிழா எனும் பெயரில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது இதில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் அவர்கள் அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுவது அநாகரிகமான அரசியலாகும் என கூறினார், தேர்தல் முடிந்து 45 நாட்களுக்கு பெண் என்றுதான் சபாநாயகர் பதவி ஏற்றுள்ளார், ஆனால் அவர்கள் பதவி சண்டை போட்டு வருகின்றனர் மூன்றாம் அமைச்சர் ஒரு துணை முதல்வர் பதவியை தர வேண்டுமென பாரதிய ஜனதா கட்சி பேரம் பேசி வருகின்றனர், மேலும் கொல்லைப்புறம் வழியாக மூன்று சட்டமன்ற உறுப்பினர் நியமனம் செய்து சுவற்றில் ஆதரவைப் பெற்று தனிப்பெரும்பான்மை காரணம் அமைச்சர் பதவி வேண்டும் என போட்டியிடுகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர்களே பேரம் பேசி வாங்குவது இது ஒரு அரசியல் நாகரீகமற்ற செயலாகும் எனவும் கூறினார். புதுச்சேரியில் முதல்வர் ஓடு சேர்த்து 6 அமைச்சர் பதவிகள், இங்கு துணை முதல்வர் பதவி என்பது கிடையாது, இவர்களுக்கு இடையே ஏற்படும் நாற்காலி சண்டையால் மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்காமல் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.