Namitha Madurai Issue : சாதி Certificate கேட்டாங்க என்ன ஆச்சு தெரியுமா?” அப்செட்டில் நமீதா

Continues below advertisement

சாதி சான்றிதழ் கேட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தன்னையும் தனது கணவரையும் கோவில் அதிகாரி அனுமதிக்கவில்லை எனக்கூறி நடிகை நமீதா புகாரளித்திருந்த நிலையில் இது தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நடிகையும் பாஜக பிரமுகருமான  நமீதா தனது கணவருடன் சாமி தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில், அவரை கோவில் அதிகாரி ஒருவர்   நமிதாவிடம்  இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு  கேட்டதாகவும் தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக கூறி நடிகை நமீதா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.  மேலும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு   இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கும்  கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில் இது தொடர்பாக கோவில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமான பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டினர் வரும் போது விசாரிப்பது வழக்கமான நடைமுறையே என்றும் கோவில் தெப்பகுளத்தை தாண்டி ஒரு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் இந்துகள் அல்லாதோர் கோவிலுக்குள் அனுமதிப்பது இல்லை என குறிப்பிடப்பட்டிருக்கும். 

மேலும்  பிரபலங்கள் கோவிலுக்கு வரும் போது,  சந்தேகம் இருந்தால் கோவில் பணியாளர்கள்,  அவர்கள் சார்ந்த மதம் குறித்து கேட்பது உண்டு.
அந்த வகையில் தான் கோவில் பணியில் இருந்த பொறுப்பு அதிகாரி,  நடிகை நமீதாவிடம் சான்றிதழ் கேட்டு உள்ளார். அதற்கு நமீதாவின் கணவர் நாங்கள்,  இந்து முறைப்படி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம் என  விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகை நமீதா மற்றும் அவரது கணவருக்கு அம்மன்,  சாமி சந்நதிகளில் VIP தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது  என்று கோவில் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram