Nainar vs Annamalai | நீங்க பாஜகவா? அதிமுகவா?” நயினார் vs அண்ணாமலை! அடித்துக் கொள்ளும் ஆதரவாளர்கள்

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருந்தாலும் முன்னாள் அதிமுக நிர்வாகி என்ற அடிப்படையில் அதிமுகவிற்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன் பேசி வருவதாக அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் அண்ணாமலை ஆதரவாளர்கள். அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் , நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களும் சோசியல் மீடியாவில் அடித்துக்கொள்வது தேசியத்தலைமையை டென்ஷனாக்கியுள்ளதாக சொல்கின்றனர்.


தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை தேசியத்தலைமை அறிவித்தது. முன்னதாக, அண்ணாமலை தலைவராக இருந்த போது பாஜக தொடர்ந்து அரசியல் களத்தில் பேசு பொருளாக இருந்தது. ஆனால், நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தமிழக பாஜக மந்த நிலைக்கு சென்றவிட்டதாக கூறப்படுகிறது. ஆளும் அரசுக்கு எதிராக தினமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவது, ஆக்ரோசமாக அறிக்கைகள் வெளியிடுவது என்று அண்ணாமலை செயல்பட்டது பாஜகவினரிடையே உற்சாகத்தை கொடுப்பதாக அமைந்தது. அதே நேரம் நான் தான் எதிர்கட்சி போல் செயல்பட்டுக்கொண்டிருக்கேன் என்று அண்ணாமலை கூறிவந்தார். அதிமுக எதிர்கட்சியாக  இருந்தாலும் செயல்படமால் இருக்கிறது என்றும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இச்சூழலில் தான் புதிய பாஜக மாநிலத்தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் அண்ணாமலையின் இடத்தை நிரப்புவார் என்று பாஜகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் நயினார் நாகேந்திரனோ இன்னும் அதிமுக முன்னால் நிர்வாகியைப்போலவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்ற அண்ணாமலை ஆதரவாளர்கள் முன்வைக்கின்றனர். கட ந்த சில நாட்களிக்கு முன்னர் நடைபெற்ற செய்தியளர் சந்திப்பில்,  நீங்கள் முன்னாள் அதிமுககாரர் என்பதால் அக்கட்சியிடம் பாஜகவிற்கு அதிக இடங்களை கேட்கமட்டீர்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த நயினார் , “எண்ணிக்கை முக்கியம் இல்லை, எண்ணம் தான் முக்கியம்” என்றார். இது அண்ணாமலை ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர்.

மூன்று வருடத்தில் பாஜகவை  தமிழ் நாடு முழுவதும் எடுத்து சென்றவர் அண்ணாமலை ஆனால் இவர் எண்ணிக்கை முக்கியம் இல்லை, எண்ணம் தான் முக்கியம் என்று சொல்கிறார் இப்படி இருந்தால் தமிழ் நாட்டில் பாஜக எப்படி வளரும் என்று நயினாருக்கு எதிராக போர்க்கொடி் தூக்கியுள்ளனர். அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், நயினார் ஆதரவாளர்களுக்கும் சமூக வலைதளங்களும் ஏற்ப்பட்டுள்ள மோதல் பாஜக தேசியத்தலைமைக்கு தலைமைக்கு தலைவலியாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola