Nainar Nagendran vs RSS: கழட்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ்? குறுக்கிடும் அண்ணாமலை! குழப்பத்தில் நயினார்

பாஜகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நயினாருக்கு ஆர்.எஸ்.எஸ்-யின்  போதிய ஆதரவு இல்லை என்றும் அண்ணாமலைபோல் ஆர்.எஸ்.எஸ்- ஐ எதிர்த்து அரசியல் செய்யலாமா இல்லை அனுசரித்து செல்லலாமா என்று தெரியாமல் தவிக்கிறாரம் நயினார் நாகேந்திரன்...நயினார் இன்னும் கழகத்து கட்சிகரராகவே வாழ்கிறார் என்று ஆர்.எஸ்.எஸ் புள்ளிகள் கடுகடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை அறிவித்தார். என்ன தான் நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவின் தலைவராக இருந்தாலும் கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்தவர் என்பதால் பாஜகவை விட கழகத்து பாசம் அவருக்கு அதிகமாக இருப்பதாக பாஜக மூத்த புள்ளிகள் அவ்வப்போது கடுகடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சேலம், கோவை என பல்வேறு மீட்டிங்குகளில் நயினார் பங்கேற்று வருகிறார்...பாஜக தலைவர் ஆகி விட்டார் ஆனால் இன்னும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்று அவர்களிடம் ஆசி கூட வாங்கவில்லையே என்று பேச்சு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் அரவணைத்து செல்பவராக அறியப்படும் நயினார் சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு சென்றதாக சொல்கின்றானர். மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்ற அவருக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை என்றும் அவருக்கு ஆர்.எஸ்.எஸ் மூத்த புள்ளிகல் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் இன்னும் கழகத்து கட்சிகாரரைப்போலவே இருக்கிறார் என்று ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் கடுகடுத்துப்போனதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். கடந்து சில நாட்களுக்கு முன்னர் கோவையில் நடைபெற்ற மீட்டிங்கில் ஒன்றில்,”மேடையில் அமர்ந்திருக்கும் கழக நிர்வாகிகளுக்கு வணக்கம்” என்று பேச்சை ஆரம்பித்தார் நயினார். மேடையில் இருந்த பாஜக நிர்வாகிகளுக்கு ஷாக் கொடுத்தார். இதெயெல்லாம் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் நயினாரிடம் எடுத்துச் சொன்னதாக கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தனக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட நயினார் அண்ணாமலையைப் போல் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அரசியல் செய்யலாமா இல்லை அவர்களை அரவனைத்துச் செல்லலாம என்று தெரியமல் குழம்பி போய் இருக்கிறாரம் நயினார். இதனைடையே, அதிமுக கூட்டணியில் இந்த முறை 100 சீட் வேண்டும் என்று கேளுங்கள் இல்லை என்றால் கூட்டணியே வேண்டாம் என்று அண்ணாமலை கூறிவருவதாகவும் சொல்லப்படுகிறது. பதவியேற்ற ஒரு வாரத்திலேயே இவ்வளவு பிரச்சனையா என்று தனக்கு நெருங்கியவர்களிடம் புலம்புகிறாரர்ம் நயினார் நாகேந்திரன்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola