நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று வந்தததும், உடனடியாக ஆக்ஷனில் இறங்கியுள்ளார் அமித்ஷா. அமைச்சர் பியூஷ் கோயலிடம் தமிழக தேர்தல் தொடர்பாக முக்கியமான பொறுப்பை ஒப்படைத்துள்ளது பாஜக.
2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது பாஜக. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, மேலும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. இந்தநிலையில் டெல்லி சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் நாங்கள் தொகுதி பங்கீடு குறித்தோ, கூட்டணி குறித்தோ எதுவும் பேசவில்லை என நயினார் விளக்கம் கொடுத்திருந்தார்.
இருந்தாலும் இந்த சந்திப்பின் போதே அதிமுகவிடம் பாஜக கேட்க வேண்டிய தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வைத்து கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இந்தநிலையில் தேர்தல் வேலைகளை வகையில் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக 3 மத்திய அமைச்சர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. அதில் தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொஹோல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தேர்தலுக்கான பாஜகவின் உத்திகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்பதே இந்த குழுவின் பணி.
இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஏற்கனவே தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு தனது பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்துள்ளார். அந்த வகையிலேயே மீண்டும் பியூஸ் கோயல் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.