Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவு

Continues below advertisement

’’தாத்தா மாமா நீங்க எனக்காக அடிச்சுக்க வேணாம்’’ எனக்கூறி பதவியே வேண்டாம் என முகுந்தன் முடிவு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமக பொதுக்குழுவில் தனது பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்க தலைவராக அறிவித்தார் ராமதாஸ். உடனே மைக்கை எடுத்த அன்புமணி 4 மாதத்துக்கு முன்பு கட்சிக்கு வந்தவனுக்கு என்ன அனுபவம் இருக்கும்? என்று மேடையிலேயே வைத்து ராமதாஸ்-க்கு எதிர்ப்பு தெரிவித்தார். ராமதாஸ் யாரா இருந்தாலும் நான் சொல்றத தான் கேட்கணும், கேட்கலனா யாரும் கட்சியில இருக்க முடியாது என சொன்னதும் மேடையிலேயே வாக்குவாதம் நடந்தது. யார் பக்கம் செல்வது என பாமகவினரே குழப்பத்தில் இருந்தனர். 

முகுந்தனுக்கு பதவி கொடுத்து ராமதாஸ் அறிவிக்கும் போது முகுந்தனை மேடைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மேடைக்கு வரவில்லை. அவர் எங்கே என கேட்டு விட்டு மீண்டும் அழைத்தார் ராமதாஸ். இந்தநிலையில் முகுந்தன் மேடைக்கு வராததற்கான காரணம் என்ன என்று தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பே அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசிய சில விஷயங்கள் முகுந்தனுக்கு எரிச்சலை கொடுத்தாக சொல்கின்றனர். கட்சிக்கு வந்த உடனே பதவிய தூக்கி கொடுக்குறாங்க என மறைமுகமாக முகுந்தனை அட்டாக் செய்துள்ளார். அவர் தன்னை பற்றி தான் பேசுவதை புரிந்து கொண்ட முகுந்தன் கோபத்தில் பொதுக்குழு நடந்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார். 

அதனால் தான் பதவி பற்றி ராமதாஸ் அறிவிக்கும் போது கூட முகுந்தன் அங்கு இல்லை என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவில்லை என்பதை உணர்ந்த முகுந்தன் தாமாகவே , இளைஞர் அணி பதவியை திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே முகுந்தன் பாட்டாளி ஊடகப் பேரவை மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தற்போது தனக்காக கட்சிக்குள் குழப்பம் வேண்டாம் என முடிவு செய்த முகுந்தன் ஊடகப் பேரவை உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram