MRK Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர் அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

Continues below advertisement

அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தனது உதவியாளரை எருமை மாடா டா நீ? என மேடையிலேயே வைத்து மைக்கில் திட்டியதோடு பேப்பரை அவர் மீது விட்டெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் நிஃப்டெம்மில் .இன்று ஜன. 3 ல் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உரையாற்ற வந்தார். அப்போது தனது உதவியாளரை  பரசுராம் எங்கே என மைக்கிலேயே கேட்டார். அமைச்சரின் குரல் கேட்டு உதவியாளர் ஓடிவந்து ஸ்கிரிப்ட் பேப்பரை கையில் கொடுத்தார். அப்போது எருமை மாடா டா நீ? பேப்பர் எங்க என ஒருமையில் திட்டினார் அமைச்சர். மேலும் அவர் அமைச்சர் கையில் கொடுத்த பேப்பரை மேடையிலேயே வைத்து உதவியாளர் மீது விட்டெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது உதவியாளரை மரியாதை குறைவாக நடத்தியதோடு அமைச்சர் பன்னீர் செல்வம் அவரை ஒருமையில் திட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram