MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.A
அரசியல் சுயலாபத்துகாக, உத்திரபிரதேசத்திற்கு அள்ளி கொடுக்கும் பாஜக அரசு, தமிழ்நாட்டையும் தென் மாநிலங்களையும் வஞ்சிப்பதாக விமர்சித்துள்ளார் விசிக எம்பி ரவிக்குமார்.
மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரியை மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்திற்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரிப்பகிர்வு தொகையான 1,78,173 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
அதிகபட்சமாக, உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வரிப்பகிர்வாக 31,962 கோடி ரூபாயும், பீகார் மாநிலத்திற்கு 17,921 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு 13,987 கோடி ரூபாயும், மேற்குவங்க மாநிலத்திற்கு 13,404 கோடி ரூபாயும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு 11,255 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 7,268 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 7,211 கோடி ரூபாயும், கர்நாடகாவிற்கு 6,498 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறைந்த அளவாக, மிசோரமிற்கு 891 கோடி ரூபாயும், சிக்கிமிற்கு 691 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “நிதி கூட்டாட்சியை ( #Fiscal_Federalism ) சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசு” என்று கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளா விசிக எம்பி ரவிக்குமார்.
ஒன்றிய பாஜக அரசு வரி வருவாயிலிருந்து அக்டோபர் மாதத்துக்கு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய பங்கைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலத்துக்கு மட்டும் 31962 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 7268 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த நிதி 28152 கோடிதான். அதைவிட உத்தரப்பிரதேசம் என்ற ஒரு மாநிலத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள நிதி அதிகமாகும்.
அரசியல் சுயநலத்துக்காக நிதி கூட்டாட்சியை சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கிறேன்