”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிறகு அதே போன்ற பிரச்னையை வேறு இடங்களில் எழுப்பி இந்துக்களுக்கு தலைவர்களாகி விடலாம் பிரதமர் மோடியை மீண்டும் மறைமுகமாக என அட்டாக் செய்துள்ளார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்.
அயோத்தி ராமர் கோயிலை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகள் அதே மாதிரியான பிரச்னை எழ ஆரம்பித்துள்ளது. மசூதி அமைந்துள்ள இடங்களில் இதற்கு முன்பு கோயில் இருந்ததாக சொல்லி ஆய்வு நடத்துமாறு இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சம்பல் பகுதியில் ஏற்பட்ட எழுந்த மசூதி சர்ச்சை வன்முறையாகவே வெடித்தது.
இதுதொடர்பாக பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், ’ ”இந்தியாவில் நீண்ட காலமாக நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, புதிய புதிய இடங்களில் அதேப்போன்ற பிரச்னைகளைக் கிளப்புகின்றனர். அதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் ஒன்றாக ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை இந்தியாவால்தான் உலகுக்கு காண்பிக்க முடியும். முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் நாட்டை உலகிற்கு முன்மாதிரியாக மாற்றுவதற்கு உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்துக்களின் தலைவர்களாக நினைக்கிறார்கள் என பிரதமர் மோடியை மோகன் பகவத் மறைமுகமாக அட்டாக் செய்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. மோகன் பகவத் அவ்வப்போது மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது விவாதமாக மாறியுள்ளது. ஏற்கனவே நான் பயாலஜிக்களாக பிறக்கவில்லை, என்னை கடவுள் அனுப்பியிருக்கிறார் என்று பிரதமர் மோடி பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பிய நிலையில், சில மனிதர்கள் தங்களை சூப்பர் மேன் என நினைத்துக்கொள்வதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியிருந்தார்.
RSS-ன் மூத்த பிரமுகர்களுக்கும் மோடிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதாக பேச்சு இருக்கிறது. மோடிக்கென்று தனிப்பட்ட வாக்கு வங்கி வளர்ந்திருக்கிறது. RSS-ஐ மீறிய ஒரு அமைப்பாக பாஜக விஸ்வரூபம் எடுத்துள்ளதை மூத்த பிரமுகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் இந்த பிரச்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. மதத்தை வைத்து பாஜக அரசியல் செய்வதை RSS தலைவரே சுட்டிக்காட்டி பேசுவதாக எதிர் தரப்பினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.