”ட்ரம்ப் கொடுமைக்காரன்” மோடிக்கு சீன அதிபர் SUPPORT! இந்தியா- ரஷ்யா- சீனா ப்ளான்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக வரி விதித்து இந்தியாவை மிரட்ட நினைத்த நிலையில், ரஷ்யா மற்றும் சீன அதிபர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ட்ரம்ப்புக்கு ஷாக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. ட்ரம்ப் கொடுமைக்காரன் என இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

இந்தியா அதிக வரி விதிப்பதாக சொல்லி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதலாக 25% வரி விதித்து பரபரப்பை கிளப்பினார். இதன்மூலம் மொத்தமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனாவையும் ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

அதிக வரி விதிப்பதன் மூலம் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவை கண்ட்ரோலில் எடுக்கலாம் என நினைத்த ட்ரம்ப்புக்கு மூன்று நாடுகளும் சேர்ந்து செக் வைத்துள்ளன. அமெரிக்க சந்தையை தாண்டி தனது ஏற்றுமதியை விரிவு செய்யும் வகையில், பல உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து வருகிறார். இந்தநிலையில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை நேரில் சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும், வர்த்தகம் தொடர்பாகவும், ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மறைமுகமாக விமர்சித்து இந்தியாவுக்கு ஆதரவாக களத்துக்கு வந்துள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். ஷாங்காய் மாநாட்டில் உலக தலைவர்கள் மத்தியில் பேசிய அவர், கொடுமைப்படுத்தும் நடத்தை என்ற வார்த்தையை பயன்படுத்தி ட்ரம்ப்பை அட்டாக் செய்துள்ளார். மேலும், ‘உலக நாடுகளை ஒடுக்க நினைக்கும் பனிப்போர் மனோபாவத்தை எதிர்க்க வேண்டும். சிலர் அதிகார அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். உலகளவில் நிலைமை நிலையற்றதாகவும் மோசமாகவும் இருக்கிறது. அனைத்து நாடுகளின் வளர்ச்சி உரிமையை பாதுகாக்க வேண்டும். பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும். அதே போல் உலகளாவிய வர்த்தகத்தின் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது” என பேசியுள்ளார்.

ஏற்கனவே இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து சந்தித்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola