Modi visit US: வரியை உயர்த்திய ட்ரம்ப்! அலறும் உலக நாடுகள்! அமெரிக்கா புறப்படும் மோடி!

அமெரிக்க வாழ் இந்தியர்களை அந்நாட்டு அதிபர் டிரம்ப் நாடு கடத்தும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பது சர்வதேச அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

அண்மையில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றக்கொண்ட டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறார். இதில் இரண்டு நடவடிக்கைகள் இந்தியாவிற்கு தலைவலியாக அமைந்திருக்கிறது. ஒன்று அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் வேலையை ட்ரம்ப் அரசு மேற்கொண்டு வருவது. மற்றொன்று இந்தியா உறுப்பினராக உள்ள BRICS நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்திருக்கும் பொருளாதார எச்சரிக்கை. 

அதாவது ட்ரம்பிற்கு சொந்தமான Truth Social பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு தான் இப்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. BRICS  நாடுகள் புதிய கரன்சியை உருவாக்குவது அல்லது US dollar க்கு பதிலாக வேறு எதாவது நாணயங்களை ஆதரிக்க முடிவு செய்தால் அந்த நாடுகள் 100 சதவீத வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார் ட்ரம்ப். இது இந்தியாவிற்கான மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் ட்ரம்பிடம் சில முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று சட்ட விரோதமாக அமெரிக்கவில் தங்கி உள்ளவர்களை நாடு கடத்துவது தொடர்பாகவும், BRICS  நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது தொடர்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஜவுளி முதல் மோட்டார் வாகனங்கள் வரை இறக்குமதி மீதான வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது அமெரிக்காவிற்கு சாதகமாக அமையும் பட்சத்தில் இந்திய விவகாரத்தில் ட்ரம்ப் சில மாற்றங்களை செய்யலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மோடி மற்றும் ட்ரம்பின் இந்த சந்திப்பு தற்போது உலக அளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola