MLA vs People | ரேஷன் கடை திறப்பு விழாMLA-வை விரட்டிய மக்கள்வைரலாகும் வீடியோ

தென்காசியில் நியாய விலை கடையை திறக்க சென்ற MLA ராஜாவை குவளைக்கண்ணி கிராம மக்கள் விரட்டி அடித்துள்ளனர். சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்களை கடைசி வரை நியாய விலை கடையை திறக்கவிடாமலேயே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் குவளைக்கண்ணி வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும் இந்த சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய திமுக வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா இருந்து வருகிறார் இந்த ராஜாவிற்கும் ஊராட்சி மன்ற தலைவர் தினேஷிற்கும் கட்சி பதவி வழங்குவது சம்பந்தமாக ஏற்கனவே முன் பகை இருந்துள்ளது.

இதனையடுத்து இன்று குவளைக்கன்னி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடையின் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி இன்று திறக்க ஏற்பாடு செய்துள்ளார். இன்று நியாய விலை கடையை திறக்கச் சென்ற ராஜா மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலை குமார் ஆகியோர் சென்றுள்ளனர். பொதுமக்கள் அவர்களிடம் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் எங்கே என்றும் நான் அவரை வைத்து மட்டுமே இந்த நியாய விலை கடையை திறப்பேன் என்றும் நீங்கள் இருவரும் திறந்தால் இந்த கடையை திறக்க விடமாட்டேன் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனை மீறி திறக்க சென்ற தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா சட்டமன்ற உறுப்பினரை மாவட்ட செயலாளர் திறக்கிறீர்கள் என்று கூறி மறித்தார். இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவிற்கும் குவளை கன்னி ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ் வாக்குவாதம்  நீண்ட நேரம் நடைபெற்றது. கடைசி வரை இவர்கள் இருவரும் நியாயவிலைக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவரால் என்ன செய்வது என்று தெரியாமல் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாவும் வாசுதேவநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலை குமாரும் திரும்பிச் சென்றனர். நியாய விலைக் கடைகை திறப்பதற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களை ஊராட்சி மன்ற தலைவர் விரட்டி அடித்த  சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola