MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்

Continues below advertisement

அதிமுக அரசின் தூங்கி வழிந்த நிர்வாகத்தால் தொலைத்திருந்த சென்னை மக்கள் தற்போது இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம் நமது திராவிட ஆட்சிக்காலம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஃபெங்கல் புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வழக்கமாக புயல் மற்றும் கனமழை காலங்களில் சென்னை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும். இந்நிலையில் இந்த ஃபெங்கல் புயல்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்களை தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டது. 


தற்போது ஃபெங்கல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனை உடனடியாக அகற்றும் பணிகளில் மாநகராட்சி களமிறங்கியுள்ளது. மேலும் முதல்வர் உட்பட அமைச்சர்கள் மேயர் என அனைவரும் நேரில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்ட காட்சிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து திமுக அரசின் சாதனைகளை சுட்டிக்காட்டி அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்!  

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது #DravidianModel ஆட்சிக்காலம்!  

இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் - திண்டிவனம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் @UdhayStalin உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram