”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

Continues below advertisement

அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான் என அமித்ஷா பேசியிருந்தநிலையில் ”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என பதிலடி கொடுத்துள்ளார் மு.க ஸ்டாலின்! 
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த 5 மாதத்தில் நடைபெற இருக்கிறது.இந்தநிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் திவீரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தற்போதைய கணக்குப்படி பார்த்தால் ஆளும் திமுக தலைமையில் ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணியாகவும், அதேபோல் தனித்துகளம் காணும் சீமான், விஜய் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் மத்தியில் ஆளும் பாஜக தனது பார்வையை தமிழ்நாடு பக்கம் திருப்பியுள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  அடுத்த டார்கெட் தமிழ்நாடு, மேற்கு வங்காளம்  தான் என பேசியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அந்த வகையில் மயிலாப்பூர் மேற்கு பகுதியில், ”என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின்  கலந்துரையாடினார். இதுதொடர்பான போட்டோவை ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 
அதில் எந்த ஷா வந்தாலென்ன?  எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்கு தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்! என பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola