MK Stalin meets Modi : ”ஆளுநரை மாத்துங்க”மோடியை சந்திக்கும் ஸ்டாலின்?டெல்லி விசிட் ஏன்?

”சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் கள நிலவரம் குறித்து பல்வேறு விவரங்களை கொடுத்துள்ளதாக தகவ்ல்கள் வெளியான நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது..

வரும் 26ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்றைய தினம் தமிழ்நாடு இல்லத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மறுநாள் 27ஆம் தேதி, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். பிரதமராக 3வது முறையாக மோடி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது என்பதால் பெரும்பாலும் எல்லா மாநில முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

3வது முறையாக பிரதமராக பதவியேற்றதற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும் தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களையும் பிரதமர் நரேந்திரமோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் முதல்வரின் இந்த சந்திப்பின் மெயின் அஜண்டாவே, ஆளுநர் ரவி தான் என்று சொல்லபடுகிறது.. சமீபத்தில் ஆளுநர் ரவி, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் கள நிலவரம், சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்தெல்லாம் அறிக்கை அளித்துவிட்டு வந்தார்.


இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் வரும் 31ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில், அவரின் பதவி காலத்தை தமிழ்நாடு ஆளுநராக நீடிக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்து திட்டமிட்டுளதாக கூறப்படுகிறது.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அரசுக்கும் இடையே நிலவும் போக்கு, எந்த வகையான ஒத்துழைப்பையும் தரவில்லை என்றும் அதோடு தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதையும் பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


ஆனால், பிரதமர் சந்திப்பு குறித்து இன்னும் முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு I.N.D.I.A கூட்டணி கட்சி முக்கிய தலைவர்கள் யாரும் பிரதமரை தனியாக சந்தித்து பேசாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் மாநில வளர்ச்சியை கருத்திக்கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கோரிக்கைகளை பிரதமரை சந்தித்து முன் வைப்பார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola