Rahul Gandhi MK Stalin Conversation | வீட்டுக்கு வாங்க ராகுல் தம்பி!’’அன்போடு அழைத்த ஸ்டாலின்

Continues below advertisement

அமெரிக்காவில் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோவை பகிர்ந்த ராகுல் ‘’ப்ரோ நாம எப்போ சென்னைல சைக்கிள் ரைடு போறோம்’’ என ஸ்டாலினிடம் ஜாலியாக கேட்டிருந்த நிலையில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு வாங்க ராகுல் தம்பி உங்களுக்கு விருந்தே காத்திருக்கு என அன்போடு அழைத்துள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், மாலை பொழுதில் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் வீடியோவானது அவரது எக்ஸ் பக்கத்திலும் பதிவிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அண்ணே.! சென்னையில் எப்போது நாம் இருவரும் சைக்கிள் ஓட்டலாம் என பதிவிட்டிருந்தார்.
ராகுலின் இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் ராகுலுக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்ட எக்ஸ் பதிவில், 
எனது அன்பு தம்பி, @ராகுல் காந்தி, உங்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்குமோ அப்போது நாம் ஒன்றாக சைக்கிள் பயணம் செய்து சென்னையை சுற்றிப்பார்ப்போம்! 🚴
என்தரப்பிலிருந்து உங்களுக்கு வர வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்று இன்னும் நிலுவையில் உள்ளது. நமது சைக்கிள் சவாரிக்கு பிறகு, என் வீட்டில் இனிப்புகளுடன் கூடிய ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை அருந்துவோம் வாங்க என ராகுலை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அரசியல் சகோதரர்களின் இந்த அன்பு உரையாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram