Senthil balaji : செந்தில்பாலாஜியை சிக்க வைத்ததா அணில்?

Continues below advertisement

கடந்த இரண்டு நாள்களாக அணில்கள் தமிழ்நாட்டின் பேசுபொருளாக மாறியுள்ளன. காரணம் தமிழ்நாடு முழுக்க அடிக்கடி ஏற்படும் மின் தடை. 2 நாள்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் நெருங்கியதை மனதில் கொண்டு, டிசம்பர் மாதத்துக்கு பிறகு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டு விட்டனர். சில இடங்களில் மரங்கள் இருக்கும், செடிகள் வளர்ந்திருக்கும், இதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டும். இதனால் உரிய இடங்களை கண்டறிந்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.  சில இடங்களில் மரங்கள் வளர்ந்து அதன் மூலம் அணில்கள் கம்பியில் ஓடுகின்றன, அவ்வாறு ஓடும் போது இரண்டு கம்பிகள் ஒன்றாகி அதனால் மின்சாரம் தடை படுகிறது” என்றார்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram