TM Anbarasan Speech: ஓபிஎஸ் 'வடை சுட' தான் போகனும்! ஈபிஎஸ், அன்புமணியை ஒருமையில் பேசிய அமைச்சர்!

Continues below advertisement

TM Anbarasan Speech: தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69ஆவது பிறந்தநாளை திமுகவினர் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல் நிலை ஊராட்சியில் திமுக சார்பில் சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக முதல்வர் மாறி தானாக வளர வேண்டும். மருத்துவர் ராமதாஸின் மகன் அன்புமணி, ராமதாஸுக்கு செல்ப்பு எடுக்கவில்லை. தானா உழைத்து முன்னேறினால் செல்ப்பு எடுத்து இருக்கும். பிள்ளையார் புடிக்கிற மாதிரி புடித்து வைத்ததால் செல்ப்பு எடுக்க வில்லை. மூப்பனார் தனது மகனை உருவாக்கினார். இப்பொழுது ஜி.கே வாசனும் காணவில்லை என பேசினார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram