Anbil Mahesh: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? அமைச்சர் அன்பில்மகேஷ் பதில்

Continues below advertisement

Anbil Mahesh: செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தது.. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அவருடைய பிறந்தநாளை, எளியோர்  எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் ஏழை,எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்றார். மேலும் 234 தொகுதிகளும் பயன்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மாறவேண்டும் என்று மேடையில் பேசினீர்கள் அவர் எப்படி மாற வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர் கேள்விக்கு, “நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாக சேப்பாக்கம் தொகுதி மக்கள் நினைப்பது, எங்களுக்கு மட்டும் இவ்வளவு செய்யும்போது, அவர் உயரிய பதிவிற்கு சென்றால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பயனுள்ளதாக இருப்பார் என்ற எண்ணம்தான் உள்ளது என தெரிவித்தனர். மேலும் அந்த வகையில் தான் ஒரு அமைச்சராக மட்டுமல்லாமல் சிறுவயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிற, உற்ற நண்பனாகவும் சொல்கிறேன், அவருடைய தாத்தா மற்றும் அப்பா அவர்களுடைய ஜீன், மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கம் அடுத்த அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தான்- நான் வெளிப்படுத்தினேன் என்றார். மேலும் துணை முதல்வர் என்ற பொறுப்பா என்ற கேள்விக்கு?? அடுத்தகட்டமாக அமைச்சராக வேண்டும்” என்று பதில் அளித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram