MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக 12 தொகுதிகள் கேட்டு நெருக்குவதால் அந்த கூட்டணியில் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். 

கடந்த 2019 ஆம் ஆண்டு திமுக தலைமையில் உருவான கூட்டணி 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் என தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ளது. முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு 25 , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக மற்றும் மதிமுகவிற்கு தல 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. 

இச்சூழலில் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் திமுகவை நெருக்குகிறது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், “2021 ல் திமுக கொடுத்த குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம். இந்த அணுகுமுறை இனி தொடராது”என்றார்.  இதனைத் தொடார்ந்து விசிக துணைப்பொதுச்செயலாலர் வன்னியரசு பேசுகையில்,” 2026 -ல் 50 தொகுதிகளில் நாங்கள் பேட்டிய வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கின்றனர்”என்றார்.

இப்படி கூட்டணி கட்சிகள் இப்போதே டிமாண்டை ஏத்தும் நிலையில் மதிமுக வும் தற்போது டிமாண்டை ஏத்தி இருக்கிறது. இது தொடர்பாக நேற்று பேசிய மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ, கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கின்றனர்”என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று நயினர் நாகேந்திரன் பேசியிருந்தார். இச்சூழலில் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக கட்சிகள் அடுத்தடுத்து டிமாண்டை உயர்த்துவதால் திமுக கலக்கத்தில் உள்ளதாக சொல்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola