Mayor Priya Vs Sekar Babu | MAYOR TO MLA!மேயர் பிரியாவுக்கு PROMOTION?அதிர்ச்சியில் சேகர் பாபு

மேயர் பிரியா தன்னை மேயராக அமரவைத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கே ஆப்பு வைக்கும் விதமாக சட்டமன்ற தேர்தலில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக திமுக வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது. இதனை சேகர் பாபு மூலமாக முயற்சிக்காமல் அவரைத் தாண்டி மேயர் பிரியா இந்த செய்தியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரை கொண்டு சேர்த்துள்ளது சேகர்பாபுவுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு பிறகு சென்னை மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். வட சென்னையில் இருந்து தேர்வாகும் முதல் பெண் மேயர் மற்றும் சென்னையின் மூன்றாவது பெண் மேயர் என்ற பெருமை பிரியா ராஜனையே சேரும். பிரியாராஜன் சென்னை பல்கலை கழகத்தில் எம்.காம் பட்டம் பெற்றவர். கிட்டத்தட்ட மேயராக பதவியேற்று 3 வருடங்கள் ஆகிவிட்டது.

மேயர் ப்ரியாவின் குடுபத்தினர் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதாலும் மேயாராக்கினால் கட்டுப்பாட்டில் இருப்பார் என்றும் கருதப்பட்டு அமைச்சர் சேகர்பாபு செல்வாக்கால் மேயராக்கப்பட்டார். இந்தநிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் தனக்கு மேயர் பதவி இல்லாமல் போய்விட்டால் காணமல் போய்விடுவோம் என்று எண்ணி சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் போட்டியிட காய் நகர்த்தி வருவதாகவும் தன்னை மேயராக அமரவைத்த அமைச்சர் சேகர்பாபுவுக்கே ஆப்பு வைக்கும் விதமாக மேயர் பிரியா சட்டமன்ற தேர்தலில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் திமுக வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது. 

இதற்கு முன் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த ஸ்டாலின், இப்போது முதலமைச்சராக இருக்கிறார். அதேபோல் மேயராக இருந்த மா. சுப்பிரமணியன் இப்போது சுகாதாரதுறை அமைச்சராக இருக்கிறார். இந்த வரிசையில் தானும் இடம் பெற வேண்டும் என தனது அடுத்த கட்ட பயணம் பற்றிய, அரசியல் கணக்கை கையில் எடுத்துள்ளார் மேயர் பிரியா. 

இதற்கு மேயர் பிரியா தேர்தலை சந்திக்க சென்னையில் திரு விக நகர் சட்டமன்ற தொகுதியை குறி வைத்து இருப்பதாக தெரிகிறது. இந்த தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளரரும் திமுகவின் துணை அமைப்பு செயலாளருமான தாயகம் கவி என்பவரின் தொகுதியாகும். இந்த தொகுதியை மேயர் பிரியா டார்கெட் செய்துள்ளது சேகர்பாபுவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதனை சேகர் பாபு மூலமாக முயற்சிக்காமல் அவரைத் தாண்டி மேயர் பிரியா இந்த செய்தியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரை கொண்டு சேர்த்துள்ளது சேகர்பாபுவை  கொதிப்படைய செய்துள்ளது என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola