Mamata Banerjee | பணிந்தார் மம்தா! மருத்துவர்கள் SHOCK TREATMENT! மீட்டிங்கில் பேசியது என்ன?

Continues below advertisement

கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறது. இறுதியில் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக இறங்கி வந்துள்ளார் மம்தா.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், உண்மையை மறைக்க கூடாது என்றும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் இறங்கினர். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அதோடு, கொலையை மறைக்க முயன்றதாகவும், ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரை சிபிஐ கைது செய்தது.

இந்தநிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டட்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்ட 4முதல் 4 முயற்சிகள் தோல்வியுற்றன. நிண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று இரவு, இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 30 பயிற்சி மருத்துவர்கள் அடங்கிய குழு போலீஸ் பாதுகாப்புடன் முதல்வர் இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. 

அதன்படி, பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல், ராஜினாமா செய்ய தாமாக முன்வந்துள்ளார். மருத்துவர்களின் கோரிக்கைகளை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்றும், மருத்துவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும் மம்தா பானர்ஜி இறங்கி வந்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய மம்தா பானர்ஜி, ‘பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகளில் 99% நாங்கள் ஒப்புக்கொண்டோம். எங்களால் வேறு என்ன செய்ய முடியும், சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பயிற்சி மருத்துவர்கள் உடனட்யாக மீண்டும் பணிக்கு வருமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram