Mallikharjun Kharge : ”என்ன கேள்வி கேட்குறீங்க தமிழ்நாட்ல கேட்க முடியுமா?” கடுப்பாகி திட்டிய கார்கே

Continues below advertisement

முடிந்தால் தமிழ்நாட்டில் போய் இப்படி கேள்வி கேட்டுப்பாருங்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிக்கார்ஜூன கார்கே கடுப்பான சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.

MUDA எனப்படும் மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையத்தில் மைசூரில்  இருக்க கூடிய  நிலங்களை பெற்று அங்கு வளர்ச்சி பணிகளை மேற்க்கொள்வர்கள். இவ்வாறு பொதுமக்களிடம் பெற கூடிய நிலங்களுக்கு பதிலாக அவர்களுக்கு வேறு இடத்தில் நிலங்கள் வழங்கப்படும். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்த நிலையில் இந்த விவகாரத்தை மையப்படுத்தி பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறது.இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் இருவர் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மூறையீடு செய்தனர். இந்தநிலையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் சித்தரமையாவிடம் விசாரணை நடத்தலாம் என கர்நாக ஆளுநர் அனுமதியளித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்ட பிண்ணனி குறித்து தனக்கு தெரியாது என்றும் இது சம்பந்தமாக  வழக்கறிஞர்களிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்று பேசிவிட்டு அங்கிருந்து  கிளம்ப முயன்றார். அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் கார்கேவிடம் இந்தியில் கேள்வி கேட்க முயன்றார்.

இதைக் கேட்டு கடுப்பான கார்கே கார்நாடகவில் இருக்கும் போது ஏன் இந்தியில் கேள்வி கேட்கிறீர்கள், இதே போல் உங்களால் தமிழ்நாட்டிற்கு சென்று அங்கு இருக்கும் தலைவர்களிடம் இந்தியில் கேள்வி கேட்க முடியுமா, கர்நாடகாவுக்கு வந்தால் கொஞ்சமாவது கன்னட மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். 
கார்கே பேசிய இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram