மல்லை சத்யா நிரந்தர நீக்கம்! ”ரொம்ப தப்பு பண்ணிட்ட” தூக்கியடித்த வைகோ

மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்தி நிரந்தரமாக நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. மதிமுகவின் ஒற்றுமைக்கும், நன்மதிப்புக்கும் கேடு விளைவிக்கும் வகையில் மல்லை சத்யா நடந்து கொண்டதாக வைகோ புகார்களை அடுக்கியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் பிரவேசத்தில் இருந்தே கட்சிக்குள் குழப்பங்கள் வெடிக்க தொடங்கியது. வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய வைகோவே தனது மகனை முதன்மை செயலாளராக்கி வாரிசு அரசியல் செய்கிறார் என வைகோ மீது சொந்த கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டினர். அதிலும் துரை வைகோ சீனியர்களை ஓரங்கட்டுவதாக மோதல் வர ஆரம்பித்தது. ட்சியின் சீனியரும் மதிமுக துணை பொதுச்செயலாளருமான மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்கும் இடையே அதிகார மோதல் வெடித்தது.

மல்லை சத்யாவை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்பது வரை சென்ற இந்த மோதலில், வைகோ தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தார். மல்லை சத்யா சமூக வலைதளங்களிலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மாத்தையா போல மல்லை சத்யாவும் ஒரு துரோகி என வைகோ பகிரங்கமாக தெரிவித்தது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி வைகோவைக் கண்டித்து சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் மல்லை சத்யா. அதில் பேசிய அவர், கூவம் நதியின் நிலைக்கு ம.தி.மு.க சென்றுகொண்டிருக்கிறது. மகனுக்கு பதவிகளை கொடுத்து தந்தையாக நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரசியலில் தோற்றுவிட்டீர்கள். எங்களுடைய வயிற்றெரிச்சல் உங்களுடைய அரசியல் சதுரங்கத்தை தூள் தூளாக்கும் என கொந்தளித்தார்.

இந்த போராட்டத்தால் கோபமான வைகோ, அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார். மேலும் 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் கொடுக்குமாறு காலக்கெடு விதித்தார். 

மல்லை சத்யா கொடுத்த விளக்க கடிதம் வைகோவுக்கு மேலும் ஆத்திரத்தை கொடுத்துள்ளது. இந்தநிலையில் மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைகோ அறிவித்துள்ளார். பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்கவும் இல்லை. குற்றச்சாட்டுகளுக்கு  விளக்கமும் அளிக்க வில்லை என வைகோ புகார்களை அடுக்கியுள்ளார். மேலும் மதிமுகவின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு,  ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வந்ததாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு தனது அதிர்ச்சியை கொடுக்கவில்லை என்றும், இதுதான் நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என மல்லை சத்யா கூறியுள்ளார். ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார் என்றும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola