ABP News

K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

Continues below advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும் Ops ஆதரவாளரும் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை முன்கூட்டியே அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், எம்.எல்.ஏ சீட் பெற பலரும் இப்போதே முட்டி மோத தொடங்கியுள்ளனர். யாரை பிடித்தால் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டு வாசலில் ஒரு பக்கம் தவம் கிடக்க ஒரு தரப்பினர் தொடங்கியுள்ள நிலையில், தங்களுக்கு அதிமுகவில் சீட் இனி கிடைக்காது என்பதையறிந்த சிலர் திமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல டீல் பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டம் ஆளங்குளம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன். ஆனால், இனி பன்னீர்செல்வத்தை நம்பினால் நட்டாறு உறுதி என்பதை உணர்ந்த அவர் அதிமுக அல்லாத மாற்றுக் கட்சிக்கு செல்ல முடிவெடுத்து அதற்கான காய்நகர்த்தல்களை கடந்த சில நாட்களாக தீவிரமாக செய்து வருகிறார். அவருடைய தற்போதைய சாய்ஸ்சாக ஆளுங்கட்சியான திமுகவே இருக்கிறது.

ஏற்கனவே, திமுக தலைமைக்கு தூது அனுப்பியுள்ள மனோஜ் பாண்டியன், தான் கட்சியில் இணைந்த பிறகு தற்போது தான் எம்.எல்.ஏவாக இருக்கும் தொகுதியில் திமுக சார்பில் நிற்க மட்டும் அனுமதி அளித்தால் போதும் என்று கூறி கோரிக்கையையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே மாதிரி, பாஜகவில் இருந்து வந்து அதிமுகவில் இணைந்து, கல்வித் துறைக்கு அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜனும் தனக்கு இனி அதிமுகவில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து, தன்னுடைய பாதையை மாற்றி பனையூருக்கு  காரை விட ரெடியாகி வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தன்னைப் போன்ற அறிவாளிகளையும் ஏற்கனவே ஆட்சியில் பங்காற்றியவர்களையும் விஜய் தன்னுடன் வைத்துக்கொண்டால், அது அவருக்கு பலம்தான் என்ற ரீதியில் த.வெ.க முக்கிய நிர்வாகியிடம் தன் பலத்தை பற்றி சிலாகித்து பேசியதோடு, தனக்கு ப்ரோமோஷன் செய்யும் பணிகளையும் செய்ய முடிவெடித்துவிட்டாராம் மாஃபா பாண்டியராஜன். விரைவில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதி என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
தவெகவுக்கு தாவும் மாஃபா பாண்டியராஜனும், திமுகவுக்கு தாவும் மனோஜ் பாண்டியனும் ஏற்கனவே தங்கள் கட்சி பணிகளில் தலைகாட்டாமல் ஒதுங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர்கள் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுப் பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola