மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
தவெக மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தியிடம் பணம் வாங்கி கொண்டு ரகசிய வேலை பார்ப்பதாகவும், சாதி பார்த்து பதவி வழங்குவதாகவும் தவெகவினரே போராட்டத்தில் குதித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தவெக மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக கல்லாணை விஜயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மாவட்ட நிர்வாகிகள் பதவிகள் வழங்குவதற்கு வட்டச் செயலாளருக்கு 5 லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அவர் பதவி வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பெண் தொண்டர்களை பாடி ஷேமிங் செய்யும் வகையில் கேலி செய்வதாகவும் தவெகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அமைச்சர் மூர்த்தியிடம் பணம் பெற்றுக்கொண்டு மக்களுக்கான பிரச்சினை தொடர்பாக எந்தவித போராட்டத்தையும் நடத்தாமல் சைலண்டாக இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். கட்சிசார்பில் அச்சடும் அனைத்து போஸ்டர்களிலும் தனது படம் இடம்பெற வேண்டுமென தொண்டர்களை மிரட்டி வருவதாகவும், கட்சிப் பதவியை சாதி மதம் பார்த்து வழங்குவதாகவும் கூறி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விசாலாட்சிபுரம் காளாங்கரை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. தொண்டர்கள் சிலர் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் இறங்கினர்.
இது குறித்து மாவட்டச் செயலாளர் கல்லாணையிடம் கேட்ட போது ன் மீது புகார் தெரிவித்த பெண் மீது செல்போன் கடை பிரச்னை, தனிப்பட்ட பிரச்னை என பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் ஒழுங்காக இருக்க வேண்டும் என கண்டித்திருந்தேன். இந்த சூழலில் என் மீது ஆதாரமற்ற புகார்களை அடுக்கியிருக்கிறார்கள். அமைச்சரிடம் பணம் வாங்கினேன், பாடி சேமிங் செய்தேன் என சம்பந்தமே இல்லாத புகார்களை தெரிவிக்கிறார். இது முற்றிலுமாக பொய்யான குற்றச்சாட்டு. இந்த விசயத்தை இன்ப ராஜ் என்ற முன்னாள் நிர்வாகி கையில் எடுத்து உள்ளடி அரசியல் செய்யபார்க்கிறார். இவர்கள் செய்யும் அரசியல் தெரியாமல் சிலர் செய்தியாக வெளியிட்டுள்ளனர். நான் எப்படிபட்ட நபர் என்று தொண்டர்களுக்கும், தலைமைக்கும் மக்களுக்கும் தெரியும்”என கூறினார்.