ABP News

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

Continues below advertisement

உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் படுகாயம் அடைந்தார். தற்போது விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் - விஜயலட்சுமி தம்பதியினர். விவசாய கூலி தொழிலாளியான பாலமுருகன், வைக்கோல் வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. வைக்கோல் வியாபாரத்திற்காக சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் எதிரே உள்ள கடைக்கு தம்பதி இருவரும் சென்றுவிட்டு சாலையை கடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சாலையை கடக்க முயன்ற இந்த தம்பதி மீது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு வாகனம் மோதியது. இதில் மனைவி விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கணவர் பாலமுருகன் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விஜயலட்சுமி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து வெளியான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்., விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola