Durai Vaiko VS M.M.Abdulla | துரை வைகோவுக்கு NOSE CUT..எகிறி அடித்த திமுக MP!

Continues below advertisement

புதுக்கோட்டையில் ரயில்வே மேம்பாலம் தேவைன்னு நாடாளுமன்றத்துல பேச போறீங்களா? ஏற்கனவே நான் நாடாளுமன்றத்தில் பேசி பணியை துவங்கியாச்சு.. இனி புதிய திட்டம் எது தேவை என்றாலும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் என புதுக்கோட்டை எம்.பி எம்.எம் அப்துல்லா, துரை வைகோவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளது, திமுக மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பெருமளவிலான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார் அவர்.

அந்த வகையில் அண்மையில் புதுக்கோட்டை பகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து தன்னுடைய நன்றியை தெரிவித்த துரை வைகோ அமைச்சர் ரகுபதி முன்னிலையில் ”புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்பான ரயில்வே மேம்பாலத்தை கொண்டு வர முழு முயற்சி எடுப்பேன், மேலும் தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வழியாக மதுரை செல்லும் ரயில்வே பாதையை அமைக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாநிலங்களவை எம்.பி எம்.எம் அப்துல்லா இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் “புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலப் பணிகளுக்காக நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பேசி அந்தப் பணி ரயில்வே பிங்க் புக்கில் இணைக்கப்பட்டு விட்டது. மேம்பாலப் பணிகளுக்கான தொடக்க நிலை சர்வே முடிந்து விட்டது. தமிழக அரசும் தனது பங்களிப்பு நிதியை கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிவிட்டது! எனவே துவங்கப்பட்டு விட்ட ஒரு பணி குறித்து இனி நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய தேவைகள் இல்லை.. எனவே புதுக்கோட்டை ரயில்வேஸ் நண்பர்கள் இனி தேவைப்படும் புதிய திட்டங்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வரும்படி பணிவுடன் வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

துரை வைகோவின் பேச்சுக்கு பதில் அளிக்காமல், எம்.பி எம்.எம் அப்துல்லா கடந்து சென்றிருக்கலாம், ஆனால் பொதுவெளியில் அவர் இவ்வாறு துரை வைகோவின் பேச்சை கண்டிக்கும் வகையில், இனி எதுவாக இருந்தாலும் என்னுடைய பார்வைக்கு கொண்டு வாருங்கள் என்று பேசியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, திருச்சியில் நடைப்பெற்ற திமுக- மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய துரை வைகோ, மேடையில் அமைச்சர் கே.என் நேரு, ரகுபதி உள்ளிட்டோர் முன்னிலைலேயே அழுதுக்கொண்டே பேசினார்.

அப்போதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு துரை வைகோவுக்கு திமுகவினர் அழுத்தம் கொடுப்பதாகவும், திமுக மற்றும் மதிமுக தொண்டர்கள் இடையே கடுமையான புகைச்சல் நிலவுவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போதும் அந்த நிலை சரியாகவில்லையா என்ற கேள்வியை எழுப்பும் விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram