Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்

எஸ்.பி.வேலுமணி அணியில் இருக்கும் லீமா ரோஸின் பதவியை மட்டும் இபிஎஸ் இன்னும் பறிக்காமல் இருக்கும் நிலையில் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டு கட்சியில் இருந்து நீக்கிகொள்ளட்டும் என லீமா ரோஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக தற்போது 2 அணியாக பிளவுபட்டு கிடக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் ஒரு அணியும் உருவானது. அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியையும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதே போல எஸ்.பி.வேலுமணி அணி விஜயபாஸ்கரை கொறடாவாக நியமிக்க கடிதம் கொடுத்தது. ஆனால் தற்போது வரை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் என ஒட்டுமொத்தமாக 27 மாவட்ட செயலாளர்களையும், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் எஸ்.பி.வேலுமணியின் அணியில் உள்ள லால்குடி தொகுதியின் எம்எல்ஏவான லீமா ரோஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அங்கிருந்து விலகி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்தவருக்கு அடுத்த ஒரு வாரத்தில் அதிமுக மகளிர் அணி இணைச்செயலளார் பொறுப்பானது வழங்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் மார்ச் மாதம் லால்குடி தொகுதி வேட்பாளராக லீமா ரோஸ் பெயர் இடம்பிடித்தது. லீமா ரோஸ் அசூர வளர்ச்சியானது அதிமுகவில் மட்டுமில்ல அரசியல் வட்டாரமே திரும்பிபார்க்கவைத்தது.

அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ள எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் லீமா ரோஸ் முக்கிய பாங்காற்றி வருகிறார். இந்தநிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது லீமா ரோஸ் மட்டும் தப்பித்து விட்டார் என நகைச்சுவையாக பேசியுள்ளனர். அதற்கு லீமா ரோஸ் அதிமுகவில் இணைய பெறப்பட்ட பணத்தையும், கட்சி பதவி வழங்க கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டு கட்சியில் இருந்து நீக்கிகொள்ளட்டும் என லீமா ரோஸ் பேசியதாக தகவல் வெளியாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola