L Murugan : அமைச்சரானார் எல்.முருகன்! வாழ்த்து சொன்ன மோடி

Continues below advertisement

அமைச்சரானார் எல்.முருகன்! வாழ்த்து சொன்ன மோடி 

 

மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்ற நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது. எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

 எல். முருகன்  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் பதவி ஏற்றார். அதன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 

மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கு மீண்டும் புதிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவிருக்கிறது. 

புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், எல். முருகன் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த தேநீர் விருந்திலும் அண்ணாமலை பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அண்ணாமலையும் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பணிகளை தொடரவுள்ளதாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram