Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும் ஈஸ்வரன்

Continues below advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜூனா குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரே ஆதவ் அர்ஜூனாவா விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆபத்து என்று வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளது அரசியல் களத்தில் புதிய அனலை கிளப்பியிருக்கிறது.

யாரும் எதிர்பாராத சூழலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஆதவ் அர்ஜூனா குறித்து பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், ஆதவ் அர்ஜூனா எல்லா வசதிகளை படைத்தவராக இருக்கிறார். அவர் அந்த வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஊடுருவியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவர் இரண்டாக உடைத்துவிடுவாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று அந்த பேட்டியில் ஈஸ்வரன் அதிர்ச்சியான கருத்துகளை வெளியிட்டுள்ளார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதவ் அர்ஜூனாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram