11 மணிக்கு என்ன வேலை வளர்ப்பு சரியில்ல”கொங்கு ஈஸ்வரன் சர்ச்சை பேச்சு கோவை பாலியல் வன்கொடுமை | Kongu Eshwaran |
திமுகவின் கூட்டணியில் MLA கொங்கு ஈஸ்வரன் கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றச்சாட்டும் வகையில் இரவு 11 மணிக்கு அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆணுடன் அங்கே என்ன வேலை என பொதுவெளியில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையம் பின்புறம் நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் தனிமையில் இருந்த கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன் அவருடன் இருந்த வாலிபரும் அரிவாளால் வெட்டப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில் இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்த நிலையில் போலீசாரை வெட்டி 3 பேரும் தப்ப முயன்றுள்ளனர். இதனையடுத்து துப்பாக்கியால் காலில் சுட்டு 3 பேரையும் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டம் ஒழுங்கு குறித்தும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியான திமுகவின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. இந்தநிலையில் திமுகவின் கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் கொங்கு ஈஸ்வரன் ஒரு பொதுவெளியில் பேசும்போது, கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரவு 11 மணிக்கு அந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன வேலை இருந்தது? அதுவும் ஒரு ஆணுடன் விமான நிலையத்திற்கு பின்புறம் இருட்டில் என்ன வேலை? இது சமூக சீரழிவு அது வளர்க்கும் விததில் உள்ளது என்று MLA கொங்கு ஈஸ்வரன் பேசியுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.