KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
"அண்ணே புல்லட் நல்லா ஓட்டுவீங்க பார்த்துருக்கோம், இப்போ நான் புதுசா "தார்" கார் வாங்கி இருக்கேன் நீங்க ஓட்டி பாருங்கனே"..என தி.மு.க நிர்வாகி ஒருவர் ஆசையாக கேட்க அவரது தார் காரை அமைச்சர் கே.என்.நேரு ஓட்டும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது..
அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரும் திமுக நிர்வாகியுமான ஒருவர் புதிதாக தார் கார் ஒன்று வாங்கியுள்ளார். புது காரை அமைச்சரிடம் காட்டி ஆசி பெற வந்த போது கே. என் நேருவிடம் அந்த நிர்வாகி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அப்போது "அண்ணே புல்லட் நல்லா ஓட்டுவீங்க பார்த்துருக்கோம், இப்போ நான் புதுசா "தார்" கார் வாங்கி இருக்கேன் நீங்க ஓட்டி பாருங்கனே"..என அன்பாக கூற உடனடியாக சாவியை கையில் வாங்கி அமைச்சர் கே. என். நேரு நிர்வாகியின் காரில் ரவுண்ட்ஸ் போனார்.
அமைச்சர் கே.என்.நேரு தனது காரை ஓட்டியதை கண்டு பூரித்து போனார் அந்த நிர்வாகி.. அமைச்சர் கே என் நேரு தார் கார் ஓட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது