Coimbator Mayor : கொந்தளித்த சீனியர்கள்சமாதானம் செய்த அமைச்சர்கள் பரபரக்கும் கோவை திமுக
மா.. உட்காரு மா, நாங்களும் அங்க இருந்து தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கோம் என்று கோவையில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் கவுன்சிலர் சாந்தி முருகனை அமைச்சர் கே.என் நேரு சமாதான படுத்தினார், அப்போது மத்திய மண்டல தலைவர் மீனா லோகு இன்றும் அழுதுக்கொண்டே வெளிநடப்பு செய்தது திமுகவினர் மத்தியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்கு முன்பாக திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அனைவரும் டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தக் கூட்ட அரங்கில் சக கவுன்சிலர்களுடன் கலந்து கொண்டுள்ள மத்திய மண்டல தலைவர் மீனாலோகு இரண்டாவது நாளாக கண்ணீருடன் பங்கேற்றார்.
திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து அமைச்சர்கள் நேரு மற்றும் முத்துசாமி ஆகியோர் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற 63 வார்டு கவுன்சிலரும், பணிகள் குழு தலைவருமான சாந்தி்முருகன், நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏன் ஒதுக்குகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். அவரை பேச விடாமல், ”உட்காருங்கம்மா” என அமைச்சர் நேரு அமர வைத்ததுடன், உங்கள் ஆதங்கங்களை நாங்கள் தீர்த்து வைக்கின்றோம் என்று தெரிவித்தார். மீண்டும் அமைச்சர்களிடம் ஆவேசமாக பேசிய கவுன்சிலர் சாந்தி முருகனை, மத்திய மண்டல குழு தலைவர் மீனாட்சி சமரசப்படுத்தினார். இருந்தாலும் ஆதங்கத்தை அடக்க முடியாமல் தனது அதிருப்தியை சாந்தி முருகன் வெளிப்படுத்தினர்.
அவரை அவரது கணவர் முருகன் மற்றும் சக கவுன்சிலர்கள் சமரசப்படுத்தினா். இருந்தாலும் நீண்ட காலமாக கட்சிக்க உழைத்த குடும்பத்தினரை ஒதுக்கி விட்டதாக கண்ணீருடன் கூட்ட அரங்கில் இருந்து தனது ஆதாரவாளர்களுடன் வெளியேறினார்.
மேலும் மத்திய மண்டல தலைவர் மீனா லோகுவும் கூட்டத்தில் இருந்து அழுதுக்கொண்டே வெளியேறிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறாது.
முதல் முறையாக மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ரங்கநாயகிக்கு மேயராக வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது, திமுகவில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.