Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதியின் எக்ஸ் தள பதிவில் யாரை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களத்தில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு முறையும் புதிய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கட்சித் தொடங்கியதில் இருந்து மக்களிடம் பெரிய செல்வாக்கை பெற்று வந்த விஜய் தற்போது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். விஜய்க்கு பிரபல நடிகையோடு திருமணம் கடந்த உறவு இருப்பதாக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்த தகவல் அண்மையில் வெளியாகி பெரியளவில் பேசுபொருளாகியது. இத்தனை விமர்சனங்களுக்க் மத்தியில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டு எரியும் நெருப்பில் எண்ணேயை ஊற்றியுள்ளார். விஜயின் நடவடிக்கைகளால் ஏமாற்றமடைந்துள்ள தவெக ஆதரவாளர்கள் தலைவனாக கொண்டாடிய விஜயை விமர்சித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதியின் எக்ஸ் தள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் அவர் " ஒரு செலிபிரிட்டி என்பவர் யார் ? நீங்களும் உங்களைப் பற்றிய மக்களின் பார்வையும்தான் உங்களை ஒரு பிரபலமாக்குகிறது. மக்களின் பார்வைக்காக உங்களை நீங்கள் இழக்கும்போது நீங்கள் கடுமையான சிக்கலில் மாட்டிக்கொள்கிறீர்கள்.' என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் வெளியான சில நிமிடங்களிலேயே கமெண்ட் செக்ஷனில் பல பெயர்கள் அடிபடத் தொடங்கிவிட்டன. அண்மை காலங்களில் விஜயின் நடவடிக்கைகளை வைத்து பார்க்கையில் இந்த பதிவு அவரையே குறிப்பிடுவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.