Khalistani Terrorist attack Ram Temple | ”ராமர் கோயிலை இடிப்போம்”தேதி குறித்த தீவிரவாதிகள்

இந்துத்துவாவின் வன்முறை, அயோத்தி ராமர் கோயில் அடியோடு தகர்க்கப்படும் என, காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, ”வன்முறை இந்துத்துவ சித்தாந்தத்தின் பிறப்பிடமான அயோத்தியின் அஸ்திவாரத்தை நாம் அசைப்போம்” என்று எச்சரித்துள்ளார். மேலும்,  கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் இந்து கோயில்களுக்கு எதிரான தாக்குதல்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். 

தடைசெய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பால் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், ஜனவரி மாதம் அதன் திறப்பு விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்யும் காட்சிகளையும் கொண்டுள்ளது. மேலும் வரும் நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று பன்னுன் அதில் பேசியுள்ளார். கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் வீடியோ படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக், 1984 சீக்கிய இனப்படுகொலையின் 40 வது ஆண்டு நிறைவை ஒட்டி,  நவம்பர் 1 மற்றும் 19 க்கு இடைப்பட்ட காலத்தில் ஏர் இந்தியா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஏற்கனவே இவர் மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தகக்து. கனடா-அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவரான இவர்,  2023ஆம் ஆண்டு இதே காலப்பகுதியிலும் இதேபோன்ற அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.

நீதிக்கான சீக்கியர்களின் பொது ஆலோசகராக பணிபுரியும் காலிஸ்தான் சார்பு வழக்கறிஞரான பன்னுன்,  2020 இல் 'தனிப்பட்ட பயங்கரவாதி' என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டார். இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. பன்னூன் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், பஞ்சாபி சீக்கிய இளைஞர்களை ஆயுதம் ஏந்துவதற்கு ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, தனி சீக்கிய நாட்டைக் கோருவதற்காக அதிக புலம்பெயர்ந்த இந்தியர்கள் வசிக்கும் நாடுகளில் கட்டுப்பாடற்ற வாக்கெடுப்புகளை ஏற்பாடு செய்வதில் பன்னுன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இதனிடையே, “வாக்கெடுப்பு பிரச்சாரத்தை நடத்தியதற்காக இந்தியா என்னைக் கொல்ல விரும்புகிறது. இந்தியாவின் நாடுகடந்த பயங்கரவாதம் அமெரிக்காவின் இறையாண்மைக்கு நேரடி சவாலாக மாறியுள்ளது” என்று கடந்த ஆண்டு பன்னுன் குற்றம்சாட்டி இருந்தார். அதைதொடர்ந்து, பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக இரண்டு இந்தியர்களுக்கு எதிராக இரண்டு இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை கடந்த அக்டோபர் மாதம் குற்றம்சாட்டியது. அவர்களில் ஒருவர் இந்திய ரா அமைப்பின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola