Karur Stampede TVK | ’’ரொம்ப WORST விஜய்’’ஒரு வாரத்திற்கு பிறகு..தலைக்காட்டிய தவெகவினர்
கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின், தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன் முறையாக தற்போது தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து பாதிப்படைந்தனர்.
ஏற்கனவே, உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை கரூர் மாவட்ட நிர்வாகிகள் சேகரித்து, அந்த பட்டியலை தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களை விஜய் உத்தரவின் பேரில் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நேரில் சந்தித்து வருகின்றனர்.
மேலும், விரைவில் கட்சியின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருப்பதாகவும், உரிய உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்த நிலையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் விரைவில் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்களது முகநூல் பதிவில் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் அடங்கிய செய்திகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் 41 பேர் ஒருவார காலம் ஆகிய நிலையில் கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்களை தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தவர்களை தற்பொழுது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் தற்பொழுது அவர்களின் இல்லத்தில் சென்று சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















