Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!
ரேஸ் ரோடு vs ரெயின் ரோடு.. என்ன பண்றீங்க சென்னை கார்ப்பரேஷன் என்று கேட்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் வளைத்தளத்தில், உதயநிதி ஸ்டாலினையும் சென்னை மாநகராட்சியை தாக்கியும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..
மது ஒழிப்பு மாநாடு, திருமா துனை முதல்வர் ஆகக்கூடாதா, குறைந்தபட்ச் செயல்திட்டம் தேவை என அடுதடுத்த யார்க்கர்களை விசிக நிர்வாகிகள் இறக்க, திமுகவின் மற்ற கூட்டணி கட்சிகள் அதை அமைதியாக ஊற்றுநோக்கி வருகின்றன. இந்நிலையில் சிறிது காலம் அமைதியாக இருந்த காங்கிரஸ் மீண்டும் கோதாவில் இறங்கியுள்ளது திமுகவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
2026 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று முதன் முதலில் கொளுத்தி போட்டவர் சிவகங்கை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தான். அதன் பின் திருச்சியில் மெட்ரோவா? அது தேவையில்லை. இதுபோன்று நடைமுறைக்கு அப்பாற்பட்ட தேவையில்லாத திட்டங்களை கைவிட்டுவிட்டு சாலை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். உடனே அதற்கு கே.என் நேரு தரப்பிலிருந்து பதிலடி வந்தது, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் அருண் நேருவுக்கு ஆதரவாக பதிவிட்டு புகைச்சலை கட்டுபடுத்தினார்.
அடுத்ததாக கார்த்தி சிதம்பரம் சென்னை மாநகராட்சியில் கைவைத்தார். கூவம் சுத்தப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் வெள்ளை அறிக்கை தேவை என்று மேயர் பிரியாவிடம் நிபந்தனை வைத்தார். ஆனால் உடனே இதில் தலையிட்ட செல்வப்பெருந்தகை, பொதுவெளியில் கார்த்தி இது போன்று கேட்பதை தவிர்த்து இருக்கலாம் என்று தெரிவித்த்து, திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்றார்.
இந்நிலையில் தான் இம்முறை திமுகவில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக முக்கியதுவம் வாய்ந்த நபராக கருதப்படும் உதயநிதியை தாக்கி சூட்டை கிளப்பியுள்ளார் கார்த்தி சிதம்பரம். சென்னை முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் மழை நீர் தேங்கியுள்ள வீடியோவை கோட் செய்து, “ரேஸ் ரோடு vs ரெயின் ரோடு” என்று பதிவிட்டு சென்னை மாநாகராட்சியை டாக் செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.
இதில் வெறுமனே அவர் மழை நீர் வடிகால் பணிகளை மட்டும் விமர்சித்து விட்டு கடந்திருக்கலாம், ஆனால் சர்ச்சை எழும் என தெரிந்தே ரேஸ் ரோடு என உதயநிதியை உள்ளே இழுத்துள்ளார் கார்த்தி. இந்நிலையில் ஏற்கனவே விசிக ஒருபக்கம் கூடைச்சல் கொடுக்க, தற்போது காங்கிரஸும் கலத்தில் இறங்கியுள்ளது.
தேர்தல் அரசியலை பொறுத்த அளவில் திமுகவின் பலமே அதன் கூட்டணி கட்சிகள் தான், கடந்த 2019 தேர்தல் முதல் அது உடையாமல் பத்திரமாக பார்த்துக்கொண்டிருக்கிறது திமுக. இந்நிலையில் கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவிற்கு, எதிர்கட்சிகள் திமுகவை அண்மை காலமாக விமர்சிக்க தொடங்கியுள்ளதால், 2026 தேர்தலில் தற்போதைய அதே கூட்டணி பலம் திமுகவிற்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.