Karti chidambaram | கொளுத்திப் போட்ட கார்த்தி! கடுப்பான காங்கிரஸ்! திமுக கூட்டணிக்குள் சிக்கல்?

Continues below advertisement

தமிழ்நாட்டில் கூட்டணி கட்சியான திமுக குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், கூவம் நதியை சீரமைத்தது தொடர்பாக சென்னை மேயர் பிரியாவிடம் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பொதுவெளியில் வெள்ளை அறிக்கை கேட்டதை தவிர்த்து இருக்கலாம், திமுக காங்கிரஸ் கூட்டணிகிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திமுகவின் பலமே அதன் கூட்டணி கட்சிகள் தான் என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை அமைத்து கொண்டு கடந்த மக்களவை தேர்தலில் 40க்கு 40 என்ற மாபெரும் வெற்றியையும் பறைசாற்றியது திமுக. தென் மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியின் பலமாக கருதப்படும் கட்சியில் ஒன்று திமுக. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் திமுகவுக்கு எதிராக பொதுவெளியில் பகிரங்கமாக கருத்துகளை தெரிவித்து வருவதாக சர்ச்சை கிளம்பி வருகிறது. இதனால் திமுக கூட்டணிக்கும் புகைச்சல் ஏற்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

முன்னதாக செல்வப்பெருந்தகை, 2026 தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸின் நிலை அப்படியில்லை. 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து காலம் தான் முடிவு செய்யும் என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன் கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆளும்கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் ரெண்டும்கெட்டானாக உள்ளது என பேசிய அவர் திமுக ஆட்சி குறித்தும் விமர்சித்து பேசியிருந்தார்.  இவர்களது இந்த பேச்சு திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியது. 

இந்தநிலையில் கார்த்தி சிதம்பரம், சென்னை மேயர் பிரியாவிடம், கூவம் நதியை மீட்க செயல்படுத்தப்படும் அனைத்து சீரமைப்புத் திட்டங்கள் மற்றும் இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை, இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் எதிர்காலத் திட்டங்கள், அர்ப்பணிப்பு, உள்ளிட்டவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரினார். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படும் என பிரியா கூறிய நிலையில் இந்த விவகாரம் அத்தோடு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுகவினர்  கார்த்தி சிதம்பரம் நன்றி கெட்ட தனமாக பேசுகிறார்.. என பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வரும் நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை இருந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்திருப்பதாவது திமுக, காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கூவம் விவகாரம் தொடர்பாக சென்னை மேயரிடம் பொதுவெளியில் வெள்ளை அறிக்கை கேட்டதை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இருக்கலாம். அதே நேரத்தில் காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த சில விஷயங்களை பேச வேண்டி இருக்கிறது. கூட்டணியில் பிரச்சனை என்றாலும் தேசிய தலைமை முடிவு எடுக்கும். அதே நேரத்தில் தற்போதைக்கு கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பிரச்சினை வந்தாலும் பேசி தீர்ப்போம். அதற்காக கருத்துச் சொல்லக்கூடாது என்று இல்லை.. கூட்டணி கட்சிகள் கருத்து சொல்வதில் என்ன தவறு இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram