கண்ணைக் கவரும் விளக்குகள் அகல்கள் தயாரிக்கும் பணி தீவிரம் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை | Karthigai Deepam 2025 |
விழுப்புரத்தில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியினை மண்பாண்ட தொழிலாளர்கள் மும்மரமாக மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி, கார்த்திகை நட்சத்திர நாளில் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்தாண்டு வருகின்ற 3 ஆம் தேதி கார்த்திகை கொண்டாடப்படுவதால் அந்நாளில் கோயில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றி இந்துக்கள் வழிபாடு செய்யவர். இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட மேலமங்கலம், தென்மங்கலம், சாலை அகரம், தென்னமாதேவி போன்ற இடங்களில் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம் அதன்படி மழை இல்லாததால் மண் அகல்விளக்கு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் அகல்விளக்குகள் மூன்று திரி, ஒரு திரி, நான்கு திரிகள் வைத்து ஏற்றும் அளவில் அகல்விளக்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஏற்றுமதியும் செய்ய உள்ளனர். மேலும் வண்டல் மண் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் தங்கள் பகுதியிலையே வண்டல் மண் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.