Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழி

Continues below advertisement

எந்த ஊருக்கும் கல்வி சுற்றுலா சென்றதே இல்லை என ஆதங்கத்துடன் கூறிய தூத்துக்குடி பள்ளி மாணவர்களை ஆதிச்சநல்லூருக்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்று மகிழ்வித்துள்ளார் எம்பி கனிமொழி

கீழவல்லநாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மாதிரி பள்ளிக்கு ஆய்வுக்காக சென்ற  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாணவ மாணவிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது மாணவ மாணவிகள் அனைவரும் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. எனவே நீங்கள் எங்களை தொல்லியல் சார்ந்து நமது பண்பாடு சார்ந்து இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தனர். நிச்சயம் அழைத்துச் செல்வதாக கனிமொழி  உறுதி அளித்தார். 

இந்நிலையில் பள்ளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் கனிமொழி. இன்று கீழவல்லநாடு மாவட்ட மாதிரி பள்ளிக்கு சென்ற அவர் அங்கிருந்து 4 பேருந்துகள் மூலம் 200 மாணவ மாணவிகளை ஆதிச்சநல்லூருக்கு அழைத்து வந்தார்.பேருந்துகளில் மாணவ மாணவிகளுடன் பயணம் செய்த கனிமொழி அவர்களுடன் கலகலப்பாக உரையாடினார். மாணவ மாணவிகளுடன் ஆதிச்சநல்லூர் பி சைட்டில் உள்ள சைட் மியூசியம், சி சைட்டியில் மியூசியம் அமைய உள்ள இடத்தில் வைக்கப்பட்ட தொல்லியல் பொருள்களை பார்வையிட்டார்.

 இந்த சைட் மியூசியம் என்பது தொல் பொருள்களை எடுத்த இடத்தில் அப்படியே காட்சிப்படுத்துவதே ஆகும். அப்படித்தான் இந்த பி சைட்டில் முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் வைத்து அதன் மேலே கண்ணாடி பேழைகள் மூலம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram