Kangana Ranaut on Rahul Gandhi : ராகுல் ஆபத்தான ஆளு! உங்க ப்ளான் இதுதானா?” கொந்தளித்த கங்கனா

Continues below advertisement

ராகுல்காந்தி மிகவும் ஆபத்தானவர், உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர தயாராகுங்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்.

அதானி குழுமம் போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் பெற்றதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது ஹிண்டன்பர்க். இந்த பிரச்னை சற்று ஓயந்த நிலையில் அந்த நிறுவனங்களில் SEBI தலைவர் மாதவி புச் மற்றும் அவரது கணவர் பங்குகளை வைத்துள்ளதாக அடுத்த அறிக்கையை வெளியிட்டது பூதாகரமாகியுள்ளது. ஹிண்டர்பர்க் அறிக்கை ஆதாரமற்றவை என மறுத்துள்ளார் மாதபி புச். னைத்து நிதி ஆவணங்களையும் வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

ஹிண்டர்பர்க் அறிக்கையை வைத்து எதிர்க்கட்சிகள் அதானி, மாதபி புச் மற்றும் பாஜகவை நோக்கி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் பற்றி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக உழைத்து சேமித்த பணம் தற்போது ஆபத்தில் உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் இதனை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு அதானி பொறுப்பா அல்லது பிரதமர் மோடி பொறுப்பா அல்லது மாதபி புச் பொறுப்பா என்றும் கேள்விகளை அடுக்கினார். ராகுல்காந்தியின் விமர்சனத்துக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக எம்.பி மாதபி புச், ”ராகுல்காந்தி மிகவும் ஆபத்தானவர். விஷமி, அழிவுகரமானவர். அவர் பிரதமராக ஆகவில்லையென்றால் நாட்டை அழிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கை, ராகுல் காந்தியின் ஆதரவுடன் வெளியானது என்பது நேற்றிரவு உறுதியானது. இந்த தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார். மக்கள் ஒருபோதும் உங்களை பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஒரு அவமானம்” என விமர்சித்துள்ளார். 

எதிர்க்கட்சி தலைவராக பாஜக எம்.பி கங்கனா ரணாவத் மோசமாக விமர்சித்துள்ளதாக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram